Friday, October 1, 2010

அண்ணல் காந்தி!

சட்டை அணியா செம்மலே!
அப்படி என்ன சிறப்பு உன்னிடம்?
மக்கள் இனத்தில் நீ கருப்பு என்பதால் இழிவு படுத்தப் பட்டாயே!
ஏன் எழவில்லை சினம் உனக்கு?
மாறாக சிந்தனை தான் எழுந்தது!
உன் உரையில் நீ வார்த்தைகளை சேர்க்கவில்லை 
மாறாக மக்களை சேர்த்தாய்! மனங்களை சேர்த்தாய்!
உன் பேச்சில் சற்றும் இல்லை வன்முறையின் கொடிய தீ!
மாறாக சிந்தனை என்னும் தீபொறி தான் எழுந்தது!
மக்கள் மனதில் கோபத்தை தூண்டவில்லை! வேகத்தை தூண்டியது! 
வன்முறை எழவில்லை! அகிம்சைப் போராட்டம் தான்  எழுந்தது!
தோட்டாக்களுக்கு இரையாகின நம் மக்களின் உடல், உயிர்!
இந்திய தேசத்திற்கு வித்தாயிற்று அவர்களின் ஆன்மா!
தலை வணங்குகிறேன் உங்கள் அனைவரையும்,
போற்றுகிறேன் உம்மை!
என் தேசத்து தந்தையே!
உன் பிள்ளைகள் ஏனோ இன்னும் வறுமையின் பிடியில்...

Saturday, June 26, 2010

செம்மொழி ஆன தமிழ் மொழியே!

பத்துபாட்டால் என் பஞ்சப்பாட்டு ஒன்றும் ஓயவில்லை,
திருக்குறளால் என் குரல் ஒன்றும் ஓங்கவில்லை,
இருப்பினும் உன்னை மறவேன் தமிழே,
நீதான் என் உயிருக்கு உமிழே!

Saturday, November 7, 2009

முன்னேறு!

முன்னேற எளிதான வழி - எளிதாக முன்னேறும் என்னத்தை தவிர்ப்பது!

Friday, March 13, 2009

இது கணிப்பொறியுகம்!!!

எலிப்போரியாவது எலியை பிடிக்க உதவும்,
கணிப்பொறி எதற்கு உதவும்?
அறிவு என்னும் எட்டா கனியை பெறுவதற்கு!
கணிப்பொறியே நீயும் ஒரு துது புறாதான்,
நான் அனுப்பும் மின் அஞ்சல்களை நொடிப்பொழுதில் கொண்டு செர்கிறாயே!
உனது பின்னிய வலையின் தொழில்நுட்பத்தில் உலகின் எந்த மூலையையும் பார்க்கலாமே!
எங்கேயும் எவருடனும் தொடர்பு கொள்ளலாமே!
என்ன விந்தை! நீ தானோ வருங்கால அறிவியலின் தந்தை!

-- ஜகன்